கார்த்தியின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர், டைட்டில் ரிலீஸ்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் கார்த்திக். சமீபத்தில் இவர் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற படம் சுல்தான்.மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் சற்றுமுன் கார்த்தியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு "சர்தார்" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜீவி பிரகாஷின் இசையில், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில், திலீப் சுப்பராயன் சண்டை பயிற்சியில் இந்த படம் உருவாகி வருகிறது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்து வருகின்றனர். இந்த படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரில் இருந்து இந்த படமும் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட ஒரு க்ரைம் படம் என தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.