தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் கார்த்திக்.தற்போது பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் நேற்று வெளியானது என்று பார்த்தோம். 'சர்தார்' என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் தற்போது இந்த படத்தில் கார்த்தி நடிக்கும் கேரக்டர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது
இந்த படத்தில் கார்த்தி மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே சிறுத்தை மற்றும் காஷ்மோரா ஆகிய படங்களில் இரண்டு வேடங்களில் நடித்திருந்த கார்த்தி மூன்றாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும், அதில் ஒரு வேடம் போலீஸ் கேரக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் பல ஆச்சரியமான விஷயங்கள் ரசிகர்களுக்கு காத்திருப்பதாகவும், இப்படத்தின் கதையை ஒவ்வொரு நிமிடமும் ஆச்சர்யப்படும் அளவுக்கு இருக்கும் என்று இயக்குனர் பிஎஸ் மித்ரன் தெரிவித்துள்ளார். ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடிக்கும் இந்த படத்தில் சிம்ரன் ஒரு முக்கிய கேரக்டரிலும் நடிக்க உள்ளார்.
ஜிவி பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைக்க இருக்கிறார் என்ற நிலையில் அவர் ஏற்கனவே இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டார். சென்னையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான செட்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது என்றும், இதனை அடுத்து மைசூர் மற்றும் தென்காசி ஆகிய பகுதிகளில் அடுத்த கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.