சிவாங்கியின் குறும்புத்தனத்திற்கு கிடைத்த பரிசு! குக் வித் கோமாளி பிரபலங்கள் யாரும் செய்யாத சாதனையை செய்த குட்டி பொண்ணு!

Update: 2021-04-28 11:50 GMT

குக்கு வித் கோமாளி பிரபலங்கள் யாரும் செய்யாத சாதனையை, தன்னுடைய வெகுளித்தனமான செய்கையினால் சிவாங்கி செய்து காட்டியுள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எதையெல்லாம் வைத்து கிண்டல் செய்தனரோ, அது அத்தனையும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னுடைய பிளஸ்சாக மாற்றிக்கொண்டார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சிவாங்கிக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. நடிகைகளுக்கு நிகரான ஏகபோக ஆதரவை பெற்றுள்ளார். டீவி நிகழ்ச்சிகளை தாண்டி கடை திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்படும் அளவுக்கு புகழ்பெற்றுள்ளார்.

இந்த நிலையில் தற்போது வரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்வோர் எண்ணிக்கை மூன்று மில்லியனை தொட்டுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் யாருக்கும் 3 மில்லியன் பாலோயர்கள் இல்லை‌ என்பது குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் தாண்டி 'ஆர்டிகிள் 15' படத்தின் தமிழ் ரீமேக்கில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சிவாங்கி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்து வெளியான படம் 'ஆர்டிகிள் 15'. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி இந்தப் படம் வெளியானது.

Similar News