பதற்றமான நேரத்தில் பப்ளிசிட்டி தேட துடிக்கும் சித்தார்த் - கைது நடவடிக்கையிலிருந்து தப்ப, ஆடிய கபாட நாடகம்!
மத்திய அரசின் செயல்பாடுகள் மீதான விமர்சனத்தை ட்விட்டர் வாயிலாக தெரிவித்து வருகிறார் நடிகர் சித்தார்த். சில நேரங்களில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் மீம்களை உண்மையென்று நம்பிக்கூட அரசை விமர்சனம் செய்கிறார்.
நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு எழுந்திருக்கும் நிலையில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உ.பி.யில் ஆக்சிஜன் தட்டுப்பாடே இல்லை என்றும், மக்களிடம் தவறான தகவலை பரப்பினால் கைது செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்தார்.
இதற்கு, பொய் சொல்வது சாமானிய மனிதனோ, சாமியாரோ, தலைவரோ யாராக இருந்தாலும் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ட்விட்டரில் சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளார்.
அரசிடம் போதுமான அளவு ஆக்ஸிஜன் கையிருப்பு உள்ளது என்றும், அதனை தேவைப்படும் இடங்களுக்கு சரியான நேரத்தில் கொண்டு செல்வதில் உள்ள சிக்கல் களையப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தும், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சித்தார்த் பேசி வருகிறார்.
இந்நிலையில் உத்திரப்பிரதேச முதல்வரை அவதூறாக பேசியதாக நடிகர் சித்தார்த் மீது பாஜக நிர்வாகி ஆனந்தன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.
புகார் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களில், தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் விடுப்பதாக மீண்டும் ட்விட்டரில் கூச்சலிட்டு வருகிறார் சித்தார்த்.