வனிதாவுடன் ஜோடி சேரும் சுரேஷ் சக்ரவர்த்தி! கோர்த்துவிட்ட பிக்பாஸ்.. நான்கு சீசன்களிலும் நச்சுன்னு வந்தவங்களுக்கு அடித்த ஜாக்பாட்!

Update: 2021-04-29 14:28 GMT

பிக்பாஸ் நான்கு சீசன்களிலிருந்தும் பிரபலமான நபர்கள், "பிக்பாஸ் ஜோடிகள்" என்ற புதிய  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களின் நடன திறமையை வெளிக்காட்டப் போகின்றனர். 

இந்த நிகழ்ச்சி பல சுற்றுகளாக நடைபெற உள்ளது. நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கு. இந்த நிகழ்ச்சியை மற்றும் ஈரோடு மகேஷ் மற்றும் தீனா தொகுத்து வழங்குகிறார்கள்.

ஒவ்வொரு வாரமும் எலிமினேட் செய்யப்பட வாய்ப்பு இருக்கு. ஜோடிகளின் நடன திறமை மற்றும் முகத்தில் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு வாரம் ஒரு ஜோடி வெளியேற்றப்பட்டு இறுதியில் 4 ஜோடிகள் பிரம்மாண்ட மேடையில் இறுதிப்போட்டியில் பங்குபெறுவர்.

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்போர் விவரம்:

1.ஷிவானி - சோம் சேகர்

2.கேபிரியல்லா - ஆஜீத்

3.அனிதா - ஷாரிக்

4.நிஷா - தாடி பாலாஜி

5.வனிதா - சுரேஷ் சக்ரவர்த்தி

6.சம்யுக்தா - ஜித்தன் ரமேஷ்

7.ஜூலி - சென்றாயன்

8.பாத்திமா பாபு - மோகன் வைத்யா ஆகியோர் நடனமாடுகிறார்கள்.

Similar News