காலத்தால் அழியாத எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம் இன்று!

Update: 2021-05-03 10:30 GMT

தமிழ் திரையுலகில் முன்னணி எழுத்தாளர், வசனகர்த்தா, கதாசிரியர், திரைக்கதை ஆசிரியராக விளங்கிய மறைந்த திரு.சுஜாதா அவர்களின் 86'வது பிறந்த தினம் இன்று. இவரது இயற்பெயர் ரங்கராஜன், எழுத்துலகத்திற்காக தனது மனைவி பெயரான 'சுஜாதா'வை புனைப்பெயர் ஆக்கிக்கொண்டார்.

1935ம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் அடிப்படையில் ஒரு பொறியாளர், ஆனால் இவரது ஆர்வமும், திறமையும் பளிச்சிட்டது எழுத்துலகத்தில்தான். 100க்கும் மேற்பட்ட நாவல்கள், 250 மேற்பட்ட சிறுகதைகள், மேலும் விஞ்ஞானம், அறிவியல், புது கண்டுபிடிப்புகள் போன்றவைகளை பற்றிய புத்தகங்கள், எண்ணற்ற திரைப்படங்களுக்கு மூலக்கதை, திரைக்கதை, வசனம் என பல தளங்களில் இவர் பயணித்துள்ளார்.

இன்றைக்கும் ரஜினி, கமல், ஷங்கர் போன்ற தமிழ் திரையுலக ஜாம்பவான்கள் இவருடன் பணிபுரிந்துள்ளனர். இன்னைக்கும் தமிழ் சினிமாவின் மாஸ்டர் படைப்புகளாக கருதப்படும் 'எந்திரன்', 'இந்தியன்', 'அந்நியன்', 'தசாவதாரம்', 'முதல்வன்' போன்ற படைப்புகளும் சுஜாதா கைவண்ணத்தில் உருவானவையே. சுஜாதா இல்லையெனில் இந்த படைப்புகள் இல்லை.


கூரிய வசனங்களுக்கு பெயர் பெற்றவர். இவரது புகழ் பெற்ற கூரிய வசனங்களை சில பார்க்கலாம்.

'கடவுள் இருக்காரா?'

'கடவுள்ன்னா யாரு?'

'நம்மை படைத்தவர்!'

'என்னை படைத்தவர் டாக்டர் வசீகரன், கடவுள் இருக்கார்' என ரோபோவையே ஆத்திகம் பேச வைத்தவர்,

'5 கோடி பேர், 5 கோடி தடவை, 5 ஐந்து பைசா திருடுனா?' என்ற ஒற்றை கேள்வி மூலம் சாதாரண மனிதனின் சிறு சமுதாய தப்பு கூட எவ்வளவு பெரிய விளைவு என்பதை அழகாக ஒற்றை வரியில் விளக்கியிருப்பார்.

'மற்ற நாட்டில் எல்லாம் கடைமைய மீறுவதற்கு மட்டும்தான் லஞ்சம், ஆனா இங்கே கடமையை செய்வதற்கே லஞ்சம்' என்ற வசனத்தின் மூலம் இந்தியாவில் உள்ள லஞ்ச ஊழலை விளக்கியிருப்பார்.

1985களில் கம்ப்யூட்டர் கோட் வேர்ட் பயன்படுத்தி ராக்கெட் கடத்தப்படுவதை 'விக்ரம்' படத்தில் அழகாக கதை பிணைத்திருப்பார்.

10 கதாபாத்திரங்கள் ஒன்றாக ஒரே நேர்கோட்டில் பிணையப்படும் 'தசாவதாரம்' கதையை அழகாக பிணைத்திருப்பார் இந்தப்படம் வேலைகள் நடக்கும்போதுதான் அவர் இறந்தது.


இப்படி தமிழ் சினிமா கண்டெடுத்த ஓர் அறிவு பெட்டகம், காலத்தால் அழிக்க முடியாத எழுத்தாளர் சுஜாதா என்கிற ரங்கராஜன் பிறந்த தினம் இன்று.

Similar News