கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தின் கதாநாயகன் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் மகனும், தி.மு.க இளைஞரணி தலைவருமாகிய உதயநிதி ஸ்டாலின் மனைவி சில வருடங்களுக்கு முன் சினிமா இயக்கத்தில் ஈடுபட்டிருந்தார். இவரின் முதல் படம் 'வணக்கம் சென்னை' அடுத்ததாக விஜய் ஆண்டனியை கதாநாயகனாக வைத்து 'காளி' என்ற படத்தை இயக்கினார். பின்னர் ஏதும் படங்கள் அவர் இயக்கவில்லை.
தற்பொழுது மீண்டும் படம் இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதில் கதாநாயகனாக ஜெயராம் மகன் காளிதாஸ் நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.