இந்தி 'விக்ரம்-வேதா' பதிப்பில் இருந்து விலகிய பிரபல ஹீரோ, ஏன்?

Update: 2021-05-06 11:15 GMT

'விக்ரம்-வேதா' இந்தி ரீமேக்'கில் இருந்து ஹிரித்திக் ரோஷன் விலகிவிட்டதாக தகவல்கள் வருகின்றன.

மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளிவந்த படம், 'விக்ரம் வேதா'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற, இப்படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆக இருக்கிறது. மாதவனாக சயீப் அலிகானும், விஜய் சேதுபதியாக அமீர் கானும் நடிப்பதாக இருந்தது. பின்னர் அமீர் கான் இப்படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன் நடிக்க ஒப்பந்தமானார்.


கொரோனோ காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ள நிலையில் ஹிரித்திக் ரோஷன் விலகிவிட்டதாக தகவல்கள் வருகின்றன.

காரணம் ஹிரித்திக் ரோஷன் மேலும் பைட்டர், கிரிஷ் 4 மற்றும் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கும் தொடரில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். இதனால் 'விக்ரம் வேதா' ரீமேக்கிற்கு கால்ஷீட் ஒதுக்க முடியாத சூழல் உருவாகி உள்ளதால், அவர் இப்படத்தில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது.

Similar News