நடிகை ஆண்ட்ரியா கொரோனோவால் பாதிப்பு!

Update: 2021-05-06 10:30 GMT

நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கும் நிலையில், தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. நடிகை மட்டுமல்லாமல் இவர் சிறந்த பாடகியும் ஆவர். நடிகை ஆண்ட்ரியா 'வடசென்னை', 'தரமணி' போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது, "கடந்த வாரம் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. என்னை கவனித்துக்கொண்ட நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி. தற்போது நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். நன்றாக குணமடைந்து வருகிறேன்" என தெரிவித்துள்ளார்.

Similar News