பாடகர் கோமகன் கொரோனோ தொற்றால் உயிரிழந்தார்!

Update: 2021-05-06 06:45 GMT

ஒவ்வொரு பூக்களுமே' பாடல் பாடிய மாற்றுத்திறனாளியான கோமகன், கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.


பார்வையற்றவரான கோமகன் 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலில், 'மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும் அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்' என்ற வரியை உணர்ச்சிப்பூர்வமாக பாடி இருப்பார். இந்தப்பாடல் தேசிய அளவில் பெயர் பெற்றது.

இதனால் கோமகன் பிரபலம் அடைந்தார். அவர் இசை பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். 2019-ம் ஆண்டு தமிழக அரசின் விருதினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கோமகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஐ.சி.எப்.பில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



பாடகர் கோமகன் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் வேளையில் இயக்குனர் சேரன் தனது ட்விட்டர் பதிவில், 'வார்த்தைகள் இல்லை, மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர். அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர். காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது. கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்' என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

Similar News