மின்னல் வேகத்தில் முடிந்த 'மாநாடு' - டப்பிங் துவங்கம், விரைவில் ரிலீஸ்!
சிம்பு சில வருட இடைவேளைக்கு பிறகு வந்தாலும் சிறப்பாகவே படங்களை முடித்து தருவதாக தெரிகிறது. சிம்பு நடிக்கும் 'மாநாடு' படப்பிடிப்பு முடிந்து 'டப்பிங்' பணிகள் துவங்கியுள்ளது.
சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். இசை யுவன் சங்கர் ராஜா.
மாநாடு படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட பணிகளை தொடங்கி உள்ளனர். அதன்படி மாநாடு படத்தின் டப்பிங் பணிகளை இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
மேலும் இப்படத்தின் டப்பிங் துவக்க பூஜை படங்களையும் பகிர்ந்துள்ளார்.