நடிகை பிரியா பவானி சங்கர் குடும்பத்தில் கொரோனோ தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
"மேயாத மான்" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர், அதற்கு முன் விளம்பரங்களிலும், சின்னத்திரையிலும் நடித்து வந்தார். இன்று இவர் தனது தாத்தா கொரோனோ தொற்றால் மரணமடைந்ததை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளது, "தாத்தா!
ஒரு successful business man. தனி மனுஷனா ஒன்னுமே இல்லாம வாழ்க்கைய ஆரம்பிச்சி 5 பசங்கள அமோகமா படிக்க வச்சி 10 பேரப் பசங்கள்ல 8 பேர டாக்டராக்கி அவங்களையும் டாக்டர்களுக்கு கட்டிக்கொடுத்து தான் உருவாக்கின ஒரு சிறிய மருத்துவர்கள் சூழ் உலகத்துல பெருமையா வாழ்ந்தவர்.
நான் தாத்தாவோட favourite லாம் இல்ல. In fact odd person outனு கூட வச்சிக்கலாம். சின்னதுலேர்ந்தே 'என்னமா இவ்ளோ துஷ்டத்தனம் பண்ணுது இது! category நாம. 10வது வரை School vacation விட்டா நாய் குட்டி மாதிரி எங்க 8 பேரையும் தாத்தா வீட்ல விட்ருவாங்க. கட்டில்கள், ஊஞ்சல்கள், கைகள், கால்கள், எங்க மண்டைகளனு உடையாத item எதுவும் இல்ல. கத்தி குத்து முயற்சி, ஆள் கடத்தல், கொலை முயற்சின்னு juvenile குற்றங்களும் இதில் அடக்கம். பட்டம், பம்பரம், கிட்டிப்புள், உண்டிகோல் தொடங்கி பரண்-ல தொங்கர வரைக்கும் அனைத்தும் கற்றது தாத்தா வீட்ல தான்.
ஆனா ராத்திரி தாத்தா வீட்டுக்கு வந்துட்டா full discipline தான். உள்ள வரும் போதே அவரோட முதல் வேலை tv இழுத்து மூடி பூட்டு போடறது தான். அப்போலாம் அந்த Door வச்ச tv.. Pepsi ungal choice மட்டும் பாத்துக்கறேன் தாத்தான்னு கெஞ்சினாக்கூட விட மாட்டார். இப்படியாக இளமை புதுமை, நீங்கள் கேட்ட பாடல், திரை விமர்சனம், நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்-னு நாங்க இழந்த show-கள் ஏராளம். எங்க பாட்டி தான் எங்களுக்கு rockstar. தாத்தா பயப்படற, பேச்ச கேக்கற ஒரே ஆளு பாட்டி தான். Full swag thug life lady தான்!