தொழில், அரசியல், திரையுலகம் என கொரோனோ அனைத்தையும் விட்டு வைக்கவில்லை, எல்லாவற்றின் பயண திசையை மாற்றியுள்ளது என்றே கூறலாம். அந்த வகையில் திரைப்படம் என்றாலே திரையரங்களுகளில் சென்று பார்த்த காலம் போய் தற்பொழுது ஓடிடி எனப்படும் இணைய வாயிலாக அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது.
அந்தவகையில் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் வைபவ், வாணி போஜன் நடித்துள்ள 'மலேஷியா டூ அம்னீஷியா' படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.
'அபியும் நானும்', 'மொழி', 'பயணம்' உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் ராதா மோகன். இவர் அடுத்ததாக, 'மலேஷியா டூ அம்னீஷியா' எனும் முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி உள்ளார். வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார்.
பிரேம்ஜி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி 'மலேஷியா டூ அம்னீஷியா' திரைப்படம் வருகிற மே 28-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.