"மாஸ்க் போட மாட்டேன்" என கூறிய மன்சூர் அலிகான் திடீரென மருத்துவமனையில் அனுமதி - காரணம் என்ன?

Update: 2021-05-10 10:00 GMT

"நான் மாஸ் போடமாட்டேன்" என கூறிவந்த நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான் திரைப்பட நடிகராகவும், குறிப்பாக வில்லன் நடிகராகவும் சிங்கம் போன்ற சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும் திரையுலகில் வலம் வந்தவர். தவிர, அவ்வப்போது அரசியல் கருத்துக்களையும் பேசி வந்தார் சமீபத்தில் நடிகர் விவேக் இறந்தபொழுது சர்சையாக கருத்து கூறி வம்பில் மாட்டிக்கொண்டவர்.


இவர் தற்பொழுது சிறுநீரக கல் பிரச்சனைக்காக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு 'உடல் நலம் தேறி வாருங்கள்' என ரசிகர்கள் சில திரைப்பிரபலங்களும் நல் வார்த்தைகள் கூறி வருகின்றனர்.

Similar News