ரம்ஜான் அன்று வெளியாகும் என எதிர்பாக்கப்பட்ட 'மாநாடு' படத்தின் பாடல் சற்று தள்ளிப்போகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் 'மாநாடு'. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
'மாநாடு' படத்தின் முதல் பாடல் வருகிற மே 14-ந் தேதி ரம்ஜான் பண்டிகையன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் காலமான காரணத்தினால் ரம்ஜான் அன்று 'மாநாடு' படத்தின் முதல் பாடல் வெளியாகாது என்றும் வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமட்சி தெரிவித்துள்ளார்.