அரசியல் அரிதாரம் கலைத்து மீண்டும் சினிமா அரிதாரம் பூச இருக்கும் உலகநாயகன் - ஒரே நேரத்தில் இரண்டு படங்கள்!

Update: 2021-05-12 11:45 GMT

"மக்கள் நீதி மய்யம்" கட்சி தலைவர் மீண்டும் "உலகநாயகனாக" அரிதாரம் பூசவுள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது கட்சியை கணிசமான தொகுதிகளில் போட்டியிட வைத்து கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் போது கடுமையான போட்டியின் முடிவில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தார். அதனைதொடர்ந்து கட்சியில் முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு விலக சிறிது இடைவெளி விட வேண்டும் என மீண்டும் சினிமாவில் நடிப்பது பற்றி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.


அவர் கைவசம் இந்தியன் 2, விக்ரம் ஆகிய 2 படங்கள் உள்ளன. இந்தியன் 2 படப்பிடிப்பு பல மாதங்களாக முடங்கி உள்ளது. இந்நிலையில், கமல்ஹாசன் இந்த பிரச்சனையில் தலையிட்டு ஷங்கரையும், தயாரிப்பாளரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இதையடுத்து விக்ரம் படத்திலும் கமல் நடிக்க இருக்கிறார். இரு படங்களிலும் மாறி மாறி நடிக்க கமல் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Similar News