கொரோனோ'வில் இருந்து மீண்டு வந்ததாக நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மருத்துவமனைகளில் இடம் கிடைக்காத அளவிற்கு கொரோனோ இரண்டாம் அலை புயல் போல் மாறி வீசி வருகிறது.
திரைப்பிரபலங்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுனும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "15 நாள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு பரிசோதித்ததில் எனக்கு நெகட்டிவ் என வந்தது. எனது ரசிகர்கள், நலம் விரும்பிகள் அனைவரது வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. இந்த ஊரடங்கு கொரோனா பரவாமல் தடுக்க உதவி செய்யும் என எதிர்பார்க்கிறேன். வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி," எனக் குறிப்பிட்டுள்ளார்.