"இனிமே இதை பற்றி பேசாதீங்க" - சிவகார்த்திகேயனின் "டாக்டர்" பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

Update: 2021-05-12 12:00 GMT

சிவகார்த்திகேயன் நடித்துள்ள "டாக்டர்" படம் பற்றிய முக்கிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். நெல்சன் இயக்கி உள்ள இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்த கோடை காலத்தில் வெளியாக வேண்டிய படம்.


ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், டாக்டர் படம் திட்டமிட்டபடி ரிலீஸாக முடியாத சூழல் உருவாகி உள்ளது.

இந்நிலையில், டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்து கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "தினமும் டாக்டர் பட அப்டேட் கேட்டு பலரும் எங்களைத் தொடர்பு கொள்கிறீர்கள். முழு படமும் முடித்து கையில் ரெடியாக உள்ள நிலையில், கொரோனா காரணமாக அதை வெளியிட முடியாமல், பல பொருளாதார பிரச்சனைகளையும் எதிர்கொண்டுள்ளோம். படம் நல்லபடி ரிலீஸ் ஆக எனது சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறேன்.



மறுபக்கம் இன்னொரு பக்கம், கொரோனா இரண்டாவது அலையில் சுற்றங்களையும், நண்பர்களையும் இழந்து கொண்டிருக்கிறேன். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News