செம்மரக்கடத்தல் பற்றிய அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' படம் இரண்டு பாகமாக வெளியாகுமா? அதிகாரப்பூர்வ தகவல்!
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் படமான புஷ்பாவின் ஃபர்ஸ்ட் லுக் 'புஷ்பராஜ் அறிமுகம்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்திற்காக முதல் முறையாக ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தண்ணா ஜோடியாக இணைந்துள்ளார். இயக்குநர் சுகுமார் மற்றும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்துடன் மீண்டும் அல்லு அர்ஜுன் இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சுடன் நடந்து வந்த நிலையில், இன்னும் சில காட்சிகளே மிச்சம் உள்ளன. இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து சுமார் ரூபாய் 250 கோடி முதல் 270 கோடி வரை செலவாகலாம் என்று கூறப்படுகிறது. எடுத்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேச காடுகளில் நடைபெறும் செம்மர திருட்டு குறித்து 'புஷ்பா' படம் பேசுகிறது. இந்த அகில இந்திய அளவில் வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பாகம் 2021 ஆகஸ்ட் 13 அன்று வெளியாகிறது. இதன் இரண்டாம் பாகம் 2022-ஆம் ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது.