இயக்குனர் ஷங்கர் மீது புகாரளித்த லைகா நிறுவனம்!

Update: 2021-05-15 04:00 GMT

லைகா நிறுவனம் இந்தியன் 2 பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கரின் மீது புகார் அளித்துள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க பெரும் பொருட்செலவில் 15 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம் இந்தியன், இதில் இந்தியாவில் தலைவிரித்தாடும் லஞ்ச ஊழலை பற்றி அருமையாக விளக்கி கதை பிணைந்திருப்பார் எழுத்தாளர் சுஜாதா. மிகவும் வெற்றி பெற்று 100 நாட்களுக்கு மேல் ஓடிய படம் இந்தியன்.


தற்பொழுது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை லைகா நிறுவனம் தயாரிக்க கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்க இயக்குனர் ஷங்கர் இயக்குவதாக ஒப்பந்தம் போடப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன் படம் பூஜையுடன் துவங்கப்பட்டது. இதில் பாதி படம் முடிவடைந்த நிலையில் பல காரணங்களுக்காக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்பொழுது இயக்குனர் ஷங்கர் இந்தியில் அந்நியன் 2 படத்தை இயக்குவதற்காக பணிகளை துவங்கியுள்ள சமயத்தில் லைகா நிறுவனம் இந்தியன் 2 படத்தை முடிக்க வேண்டும் என குரல் எழுப்பியுள்ளது.


கமல் நடிக்கும் இந்தியன் - 2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க இயக்குனர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், படத்தின் தாமதத்திற்கு லைகா நிறுவனம் தான் காரணம் என இயக்குனர் ஷங்கர் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் லைகாவின் அதிரடி செயலால் ஆடி போய் உள்ளார் இயக்குனர் ஷங்கர்.

Similar News