இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி நேற்றிரவு கொரோனா தொற்றால் உயிரிழந்தார்!
இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி நேற்றிரவு கொரோனா தொற்றால் உயிரிழந்தார், அவருக்கு வயது 38
கொரோனோ இரண்டாம் அலை மிக தீவிரமாக தமிழகத்தில் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. வயது வித்தியாசமின்றி இளைஞர்கள் முதல் முதியோர்கள் வர கொரோனோ'விறகு பலியாகி வருகின்றனர். இந்திய அளவில் தமிழகம் கொரோனோ பாதிப்பில் முதல் 5 இடங்களில் உள்ளது.
இதனால் தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர், பாடலாசிரியர், வசனகர்த்தா, நடிகர் என பன்முகங்கள் கொண்ட அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்து கொரோனோ தொற்று கரணமாக நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களும், நண்பர்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.