அரசை விமர்சித்து மீண்டும் ட்விட் செய்த நடிகை ஓவியா - பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் பிரபலமடைய இவ்வாறு செய்கிறாரா?
மீண்டும் பிரதமர் மோடியை விமர்சித்து கேள்வி எழுப்பி நடிகை ஓவியா ட்விட் செய்துள்ளார். பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் பிரபலமடையை இப்படி செய்கிறாரா என கேள்வி எழுந்துள்ளது.
தமிழில் களவாணி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா, பிறகு சில படங்களில் நடித்து வந்தார் பின் சரியான பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் அதிகம் திரையில் காண இயலவில்லை. பின்னர் நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் சிறுது பிரபலமானார்.
அதன்பிறகு சில பட வாய்ப்புகள் கிடைத்தன. சில மாதங்கள் முன்பு மத்திய அரசை விமர்சித்து ட்விட் செய்திருந்தார் நடிகை ஓவியா இதற்கு தமிழக பா.ஜ.க சார்பில் வழக்கும் தொடரப்பட்டது. இதனையடுத்து மீண்டும் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சிக்கும் விதமாக ட்விட் செய்துள்ளார்.
டெல்லியில் பல்வேறு இடங்களில் மோடிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த போஸ்டரில், ``மோடி ஜி, எங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தீர்கள்?'' என்று கேள்வியெழுப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த போஸ்டர் விவகாரத்தில் சுமார் 25 பேரைக் கைது செய்தது டெல்லி போலீஸ். இதனையடுத்து எதிர்கட்சிகள் சார்பில் என்னையும் கைது செய்யுங்கள் என ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நடிகை ஓவியாவும் தன் பங்குக்கு, ``இது ஜனநாயகம் தானா?'' என்று கேள்வியெழுப்பியதோடு ``என்னையும் கைது செய்யுங்கள்'' என்ற பொருளிலான #ArrestMeToo ஹேஷ்டேக்கையும் பதிவு செய்திருந்தார். அரசியல் காரணங்களுக்காக ட்விட் செய்வது போல் இல்லாமல் அவ்வபோது திடீரென மத்திய அரசை மட்டும் விமர்சனம் செய்வது பிரபலமடைந்து அதன் மூலம் படவாய்ப்புகளுக்காகவா அல்லது எதிர்கட்சிகளின் தூண்டுதலில் இப்படி செய்கிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.