தமிழ் திரையுலகையும் ஆட்டி படைக்கும் கொரோனோ - இரு நடிகர்கள் உயிரிழப்பு!

Update: 2021-05-17 10:45 GMT

கொரோனோ இரண்டாம் அலையால் தமிழ் திரையுலகில் தினமும் அதிர்ச்சியூட்டும் இழப்புகளும், மரணங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்ந வகையில் நேற்றும், இன்றும் இரு நடிகர்கள் கொரோனோ தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.


நேற்று நடிகர் பவுன்ராஜ் கொரோனோ தொற்றால் உயிரிழந்தார். இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் நடித்தவர்.


இன்று மற்றொரு நடிகர் நிதிஷ் வீரா கொரோனோ தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் புதுப்பேட்டை, அசுரன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்.  தினமும் இதுபோன்ற துக்க செய்திகளால் தமிழ் திரையுலகமும், ரசிகர்களும் கவலையடைந்து வருகின்றனர்.

Similar News