"கொரோனோவில் இருந்து மீண்டுவிட்டேன், நம்பிக்கையை இழக்காதீர்" - உற்சாகம் பொங்கும் சுனைனா!
கொரோனோ இரண்டாம் அலை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் மரண இழப்புகள் அதிகமாகி கொண்டே வருகின்றன. தமிழ் திரையுலகத்தையும் கொரோனோ விட்டுவைக்கவில்லை நிறைய நடிகர், நடிகை, இயக்குனர்கள் கொரோனோ'வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் நடிகை சுனைனா கொரோனோ'வில் இருந்து மீண்டதாக உற்சாகம் பொங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "அனைவருக்கும் வணக்கம்!
2 வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, இறுதியாக கோவிட்டுக்கு நெகட்டிவ் என பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது. பிரார்த்தனைகளை அனுப்பிய அனைவருக்கும் நான் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல விரும்புகிறேன்" என ட்விட் செய்துள்ளார்.