உலக அளவில் உயர செல்ல இருக்கும் பார்த்திபனின் படைப்பான 'ஒத்த செருப்பு'!

Update: 2021-05-18 13:30 GMT

ஒத்த செருப்பு படம் இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது.


நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தினார் பார்த்திபன். இதில் பார்த்திபன் மட்டுமே திரையில் தோன்றுவார் மற்ற கதாபாத்திரங்கள் குரல் மட்டுமே கேட்கும். தமிழில் மட்டுமின்றி உலக மொழிகளில் இது புது முயற்சியாக இருந்தது. இதனால் இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன.


இந்நிலையில், ஒத்த செருப்பு படம் இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக பார்த்திபன் அறிவித்துள்ளார். ஒத்த செருப்பு படத்தின் இந்தி ரீமேக்கில் நவாசுதீன் சித்திக் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆங்கில ரீமேக்கில் நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News