இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகை நயன்தாரா கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். தனியார் மருத்துவமனை ஒன்றில் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார் அவர். இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. விரைவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது.
நயன்தாரா தடுப்பூசி செலுத்திக் கொண்டதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
இந்தியாவில் மொத்தம் 18,44,53,149 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 4,20,24,922 பேருக்கு இரண்டாம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.