"என்ன நடக்கிறது பினராயி விஜயன் அவர்களே?" - கேள்வி எழுப்பிய மாளவிகா மோகனன்!
கேரளாவின் அமைச்சராக இருந்த ஷைலஜா டீச்சருக்கு அமைச்சரவையில் ஏன் இடம் கொடுக்கவில்லை என நடிகைகள் குரல் எழுப்பி வருகின்றனர்.
கேரளத்தில் கடந்த முறை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் ஷைலஜா டீச்சர், நடந்து முடிந்த கேரள சட்டமன்ற தேர்தலில் மட்டனூர் தொகுதியில் போட்டியிட்ட சைலஜா டீச்சர் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். முதல்வர் பினராயி விஜயனின் முந்தைய ஆட்சியின் போது சுகாதாரத் துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்த பெரிதும் போராடியவர் இவர்.
இவருக்கு இந்த முறை அமைச்சரவையில் இடமளிக்கவில்லை பினராயி விஜயன் அரசு. இதனால் மக்களிடத்தில் #BringBackShailajaTeacher எனும் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதில் திரைத்துறையை சேர்ந்த நடிகைகளான பார்வதி மேனன், மாளவிகா மோகனன், அனுபமா ஆகியோர் ஷைலஜா டீச்சருக்கு ஆதரவாக தங்கள் குரலை எழுப்பியுள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்கும் போரில் சிறப்பான பணியாற்றி வந்த சைலஜா டீச்சருக்கு புதிய அமைச்சரவையில் இடமில்லாதது ஏன்? என முதல்வர் பினராயி விஜயனுக்கே நேரடியாக டேக் செய்து கேள்வி எழுப்பி உள்ளார் மாளவிகா மோகனன்.