இப்பொழுது திரையரங்குகளை விட ரசிகர்கள் அதிகம் ஓடிடி தளத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். காரணம் கொரோனோ தோற்று போன்று பயம், மேலும் ஓடிடி தளத்தில் விருப்பப்பட்ட நேரத்தில் விருப்பமான படைப்புகளை தேர்வு செய்து பார்க்கலாம் என்ற சுலபமான வழிமுறை. ரசிகர்களின் இந்த ரசனையை படைப்பாளிகளும் புரிந்துகொண்டு ஓடிடி தளங்களில் வித்தியாசமான தங்கள் படைப்புகளை வெளியிட துவங்கிவிட்டனர்.
அந்த வகையில் தமன்னா, பசுபதி ஜி.எம்.குமார் நடிப்பில் இன்று வெளியாகும் "நவம்பர் ஸ்டோரி" ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தன் தந்தையின் சிகிச்சைக்கு பணம் தேடும் நிலையில் ஏகப்பட்ட பிரச்சினைகளை சமாளிக்கும் பெண்ணின் கதைதான் "நவம்பர் ஸ்டோரி" இதில் த்ரில்லர் பாணியில் வேறு கதையமைப்பு இருப்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.