"கிரிக்கெட்'ன்னா நமக்கு எப்போதுமே தோனி'தான்" - புகழ்ந்து தள்ளிய ராஷ்மிகா மந்தனா!

Update: 2021-05-21 01:15 GMT

தென்னிந்திய திரையுலகில் முக்கிய கதாநாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா.

கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா 'கிரிக்பார்டி, படத்தின் மூலம் புகழ் பெற்றார். அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட முன்னனி நடிகை, திரையுலகில் மட்டுமல்ல சமூக வலைதளங்கிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுபவர்


சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவில் வந்த ராஷ்மிகா மந்தனா, ரசிகர்களின் கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளித்தார்.


அப்பொழுது கிரிக்கெட் சம்மந்தமான உரையாடல்களை ரசிகர்கள் கேட்க துவங்கினர். கிரிக்கெட் தொடர்பான கேள்விகளையும் ரசிகர்கள் ராஷ்மிகாவிடம் கேட்டனர். அப்போது, கிரிக்கெட்டில் யார் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்? என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ராஷ்மிகா, மகேந்திரசிங் தோனி என்றார். கிரிக்கெட் மைதானத்தில் தோனியின் அணுகுமுறை, பேட்டிங், கேப்டன்சி என அனைத்தையும் தான் ரசிப்பதாகவும், கிரிக்கெட்டுக்கு தேவையான 100 விழுக்காட்டையும் அவர் கொடுப்பதாக புகழ்ந்து தள்ளினார். மேலும், தோனியில் மிகத் தீவிர ரசிகை என்றும் ராஷ்மிகா தெரிவித்தார்.

Similar News