"துணி மாஸ்க் அபாயம், சர்ஜிக்கல் மாஸ்க் விலையை கம்மி பண்ணுங்க" - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறிய யோசனை

Update: 2021-05-21 09:00 GMT

ஊரடங்கு உத்தரவு அறிவித்த பின்னரும், தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு யோசனை கூறி பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனோ இரண்டாம் அலை தமிழகத்தில் சிதைத்து வருகிறது, தினமும் 35 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அது இன்னும் நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது. இந்தி அளவில் கொரோனோ பாதிப்பில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடதக்கது.



இந்த நிலையில் தமிழ் திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் யோசனை சம்மந்தமான முக்கிய ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், "முழு ஊரடங்கிற்குப் பின்னும் கொரோனா குறையாமல் தொடர, மக்கள் துணியால் ஆன முகக்கவசம் மட்டுமே அணிவதை முக்கிய காரணமாக பார்க்கிறேன். துணி கவசம் 1% கூட வைரஸ் பரவலை தடுக்காது. சர்ஜிகல் மாஸ்க்-ஐ கட்டாயமாக்கலே இதற்கான தீர்வாக முடியும் என நம்புகிறேன். விலைக் கட்டுப்பாடும் அவசியம்". என்று பதிவு செய்துள்ளார்.


இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு கருத்து சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர். அரசு இதனை கண்டுகொள்ளுமா என பொருத்திருந்து பார்க்கலாம்.

Tags:    

Similar News