வரும் ஜூன் 4'ம் தேதி வெளியாக இருக்கும் 'தி ஃபேமிலி மேன் 2' வெப் தொடரில் தமிழர்களை கொச்சைப்படுத்துகிறது என தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்.
இது போன்ற காட்சி அமைப்புகளை தடை செய்யாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
மேலும் 'தி பேமிலி மேன் 2' இணையத்தொடரை நாடெங்கும் ஒளிபரப்பித் தமிழர்கள் குறித்துத் தவறான கருத்துருவாக்கத்தைச் செய்ய முனைந்தால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்." என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் 'தி ஃபேமிலி மேன் 2' சீரிஸ்'ல் நடித்துள்ள தமிழ் நடிகையாகிய சமந்தா தனது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பதிவில் அவர், "அமைதியாக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள்' என்று பதிவு செய்து மார்ட்டின் லூதர் கிங்கின் பொன்மொழியான 'முழுப்பாதையும் தென்படாவிட்டாலும் முதலடியை எடுத்து வைப்பதற்கு நம்பிக்கையே முக்கியம்' என்பதையும் பதிவு செய்துள்ளார்.
இது எதிர்ப்பாளர்களுக்கான பதிலா அல்லது எப்போதும் போல் சதாரணமாக ட்விட்டர் இடும் பதிவா என்பதை சமந்தா'வே கூறவேண்டும்.