நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவிய பிரபல நடிகர் - நெகிழ்ச்சி!

Update: 2021-05-25 02:30 GMT

கொரோனோ இரண்டாம் அலையால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள்.


தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன் கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். விடுத்ததோடு மட்டுமல்லாமல் முன்னணி நட்சத்திரங்களிடம் அவர் உதவி கோரியும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இது மட்டுமின்றி தனது சொந்த செலவில் 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.


இந்நிலையில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து வாடும் நடிகர்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய். ஒரு லட்சமும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூபாய். 50 ஆயிரமும் வழங்கியுள்ளனர். இந்த பணம் வருமானமின்றி தவிக்கும் நடிகர்களுக்கு நிவாரண பொருள்கள் வாங்கி வழங்க பயன்படுத்தப்படும் என தெரிகிறது.

Similar News