கொரோனோ இரண்டாம் அலை தமிழகத்தை கடுமையாக பாதித்து வருகிறது. தினமும் 35 ஆயிரம் பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்படுகிறது. இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்த கோர நிலையில் நிறைய உயிரிழப்புகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.
இந்த நிலையில் தமிழ் திரையுலகின் இயக்குனர் ராஜூ முருகனின் அண்ணன் கொரோனோ தொற்று காரணமாக உயிரிழந்தார்.
எழுத்தாளராக தன் பயணத்தை துவங்கிய ராஜு முருகன் குக்கூ படத்தின் மூலம் இயக்குனரானார். பின்னர் ஜோக்கர், ஜிப்ஸி படங்களை இயக்கினார். மெஹந்தி சர்கஸ் படத்தின் கதை, வசனமும் ராஜூ முருகனுடையதே.
இவருடைய அண்ணன் குரு என்கிற குமரகுருபரன் உடல்நிலை பரிசோதனை செய்த பொழுது கொரோனோ இருப்பது கண்டறியப்பட்டது பின்னர் சிகிச்சை பலனின்றி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.