மீண்டும் துவங்கும் "கொக்கி குமார்"ன் பயணம் - செல்வராகவனின் சூசக அறிவிப்பு!
இயக்குனர் செல்வராகவன் படைப்புகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு அவரின் முதல் படமான "துள்ளுவதோ இளமை" துவங்கி சமீபத்தில் வெளிவந்த "நெஞ்சம் மறப்பதில்லை" வரை செல்வராகவனின் திரைப்படத்திற்கு தனியாக ஓர் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதற்கு காரணம் பெரும்பாலும் இவர் படங்களில் கதாபாத்திரத்தின் வடிவமைப்பே.
ஒரு இயக்குனரின் திரைப்படத்திற்கு இரண்டாம் பாகம் எப்போது வரும் என அதிகம் கேட்கப்பட்டது இவரின் படங்களுக்காகதான் இருக்கும். "புதுப்பேட்டை", "ஆயிரத்தில் ஒருவன்", இவரின் திரைப்படங்களின் இரண்டாம் பாகங்கள் எப்போழுது வரும் என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலே உள்ளது.
அந்த வகையில் இயக்குனர் செல்வராகவனின் திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்த புதுப்பேட்டை ,கடந்த 2006ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்தது. புதுப்பேட்டை திரைப்படம் வெளியான சமயத்தில் வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றியைத் தராமல் போனாலும் அதற்கடுத்த இந்தப் பதினைந்து ஆண்டுகளில் பலரின் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. இன்னும் கூறப்போனால் இயக்குனர் செல்வராகவனுக்கே ரசிகர்களின் இந்த ஆர்வத்தை பார்த்துதான் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என தோன்றியிருக்க வேண்டும்.
இந்த நிலையில் நேற்று புதுப்பேட்டை வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில் "இந்த பயணம் தொடரும்" என புதுப்பேட்டை படத்தின் போஸ்டரை இணைத்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு மேலும் ரசிகள்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்துள்ளது.