"இது விருதுக்கே அவமரியாதை" - வைரமுத்துவிற்கு கேரள விருது பற்றி நடிகை பார்வதி காட்டம்!
"பாலியல் புகார் பல சுமத்தப்பட்டிருக்கும் வைரமுத்துவிற்கு ஓ.என்.வி பெயரில் விருதா?" கன கடுமையாக சாடியிருக்கிறார் நடிகை பார்வதி.
பூ படத்தின் மூலம் அறிமுகமாகி, மரியான் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை பார்வதி இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் முன்னனி நடிகையாவார். இவர் தற்பொழுது வைரமுத்துவிற்கு ஓ.என்.வி விருது கேரள அரசு அறிவித்திருப்பது பற்றி கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர், "ஓ.என்.வி சார் நமது பெருமை. ஒரு கவிஞராகவும் பாடலாசிரியராகவும் அவரது பங்கு ஈடு இணையற்றது. " பாலியல் புகார்கள் பல சுமத்தப்பட்டிருக்கும் வைரமுத்துவிற்கு ஓ.என்.வி பெயரில் விருது வழங்குவது பெரும் அவமரியாதை!" என குறிப்பிட்டுள்ளார்.