கவின், அம்ரிதா ஐயர் நடித்த 'லிஃப்ட்', ஓ.டி.டி-யில் வெளியாகிறதா? தயாரிப்பாளர் விளக்கம்

Update: 2021-05-28 10:45 GMT

கவின், அம்ரிதா ஐயர் நடித்துள்ள 'லிஃப்ட்' படத்தின் வெளியீடு பற்றிய முக்கிய அறிவிப்பை அதன் தயாரிப்பாளர் பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்குத் தயாராகி வந்த சமயத்தில் கொரோனா


இரண்டாவது அலை காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தின் வெளியீடு பற்றி பல தகவல்கள் உலாவி வந்த நிலையில் படத்தின் வெளியீடு குறித்து லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.


அவர் கூறியதாவது, "லிப்ட் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகவுள்ளது. ஜூன் 20-ம் தேதிக்கு மேல் சூழ்நிலையைப் பார்த்துவிட்டு, தியேட்டரில் வெளியிடக் கூடிய சூழல் இல்லை என்றால் மட்டுமே ஓடிடியில் வெளியாகும். ஆனால், 'லிப்ட்' தியேட்டருக்கான படம் தான்" என்று ரவீந்திரன் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Similar News