பிரபல தயாரிப்பு நிறுவனத்தை தன்வசப்படுத்திய அமேசான் - இனி தாறுமாறு தான்!
ஹாலிவுட்ன்டி பழம்பெறும் மற்றும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான எம்.ஜி.எம் நிறுவனத்தை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் மூலம் உலகின் மூன்றாவது ஓ.டி.டி தளம் ஆகிறது அமேசான்.
ஹாலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத தயாரிப்பு நிறுவனம் எம்.ஜி.எம். இதுவரை 4,000 திரைப்படங்கள் மற்றும் 17,000 தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது. மேலும் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் படங்கள், ராக்கி, பேஸிக் இன்ஸ்டின்க்ட் மற்றும் டாம் அண்ட் ஜெர்ரி ஆகிய சீரிஸ் எம்.ஜி.எம் நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளாகும்.
கடந்த சில வாரங்களாக இரு நிறுவனங்களும் பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் தற்பொழுது எம்.ஜி.எம் தயாரிப்பு நிறுவனத்தை அமேசோன் நிறுவனம் 8.45 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இனி எம்ஜிஎம் தயாரிப்புகள் அனைத்தையும் அமேசானில் பார்க்கலாம்.
மேலும் எம்.ஜி.எம் தயாரிப்புகளான 4,000 திரைப்படங்கள் மற்றும் 17,000 தொலைக்காட்சி தொடர்களை அமேசான் தளத்தில் கண்டு ரசிக்கலாம், இதன் மூலம் உலகின் மிகப்பெரிய ஓடிடி தளம் ஆகிறது அமேசான் ப்ரைம் டைம் நிறுவனம்.