"நீ சமுத்திரம்" - பாலியல் புகார் புகழ் வைரமுத்துவிற்கு பாரதிராஜா உருக்கம்!

Update: 2021-05-29 01:45 GMT

"இந்த குளத்தில் கல்லெரிந்தவர்கள்" எறியட்டும் அவர்களின் தாகம் தீரட்டும்.குளம் என்பது கானல் நீர், நீ சமுத்திரம்" என பாலியல் புகாரில் சிக்கியுள்ள வைரமுத்துவிற்கு இயக்குனர் பாரதிராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.

வைரமுத்து'விற்கு கேரள அரசின் உயரிய விருதான ஓ.என்.வி விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பு விடுக்கப்பட்ட நிலையில், மலையாள திரையுலகில் சலசலப்பு எழுந்தது. "ஒரு பாலியல் புகாரில் சிக்கியவருக்கு எப்படி நம் உயரிய விருதை அளித்து நம் விருதை அவமதிக்கலாம் என்கிற ரீதியில்" எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் வைரமுத்து'விற்கு வழங்கும் விருதை மறுபரிசீலனை செய்யப்படும் என விருது வழங்கும் அமைப்பு அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கினாலும் பரவாயில்லை என தன் பால்ய கால நண்பருக்கு ஆதரவாக இயக்குனர் பாரதிராஜா களத்தில் குதித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

"பேரன்பினால்.. மலையாள இலக்கியத்தின் உயரிய விருதான ஓ.என்.வி, எங்கள் கவிப்பேரரசு அவர்களுக்கு அறிவித்தது அறிந்து மகிழ்வுற்றேன்..

ஆனால் அரசியல் நெருக்கடியால் மறுபரிசீலனை என தற்போது செய்திகள் வந்திருப்பதை கண்டு வருத்தம் சிறிதளவும் இல்லை. சமீபகாலமாக எம் இனத்தின் மீதும் மொழி மீதும் அரசியல் காழ்புணர்ச்சி கொண்டு எங்கிருந்தோ தனிமனித மாண்பிற்கு களங்கத்தை ஏற்படுத்தும்விதமாக சில நபர்களை கொண்டு மதம், இனம், மொழியாக பிரிவினை ஏற்படுத்தும் விதமாக அறிவிக்கப் பட இயலாத போரினை தொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழர்களாகிய நாம் ஒற்றுமையுடன் இருந்து முறியடிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

உலகத்தமிழர்களின் நெஞ்சங்களில் கவிப்பேரசு என்கிற பட்டம் சூட்டி கம்பீரமாக நிற்கும் கவிஞனே உன்னை அசைத்துப் பார்த்துவிடலாம் என்பது வெறும் கனவாகவே இருக்கும், தமிழர்களுக்கு என்றும் உறுதுணையாக மாண்புமிகு தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர். மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

'இந்த குளத்தில் கல்லெரிந்தவர்கள்" எறியட்டும் அவர்களின் தாகம் தீரட்டும்.

குளம் என்பது கானல் நீர், நீ சமுத்திரம்" என தன் பாலியல் புகார் புகழ் கவிஞர் நண்பருக்கு ஆதரவாக பாரதிராஜா களத்தில் குதித்துள்ளார்.

Tags:    

Similar News