"எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள்" - நம்பிக்கையூட்டும் சிவகார்த்திகேயன்!
"எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள்" என ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் நம்பிக்கையூட்டியுள்ளார்.
தற்பொழுது கொரோனோ இரண்டாம் அலை தமிழகத்தில் உட்சபட்சத்தில் இருப்பதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளே மூழ்கி கிடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "என்னுடைய ரசிகர்களான தம்பி, தங்கைகள் அனைவருக்கும் வணக்கம். அனைவரும் பத்திரமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். தயவுசெய்து மிகவும் அவசியம் என்றால்தான் நீங்கள் வெளியே போக வேண்டும். எப்போதும் முககவசம் அணிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நான் போட்டுக்கொண்டேன். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.அவர்களையும் வெளியே போகவிடாமல் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள். உடம்பை கவனித்து கொள்ளுங்கள். கொரோனா பாதிப்பு அனைத்து வயதினருக்கும் ஏற்படுகிறது என்று கேள்விப்படுகிறேன். நீங்கள் பத்திரமாக இருந்தீர்கள் என்றாலே, இது பெரிய பிரச்சினையே இல்லை. சீக்கிரமே அனைத்தும் சரியாகிவிடும்". இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.