தெலுங்கு 'லூசிபர்' பதிப்பில் இருந்து இயக்குனர் மோகன்ராஜா விலகலா?

Update: 2021-05-31 08:15 GMT

தெலுங்கு 'லூசிபர்' பதிபபில் இருந்து இயக்குனர் ஜெயம் ராஜா விலகிவிட்டார் என்ற வதந்திக்கு தற்பொழுது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


மலையாளத்தில் மோகன்லால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் 'லூசிபர்'.

அதிரிபுதிரி ஹிட்டான இந்த படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் கச்சிதமாக பொருந்தியிருப்பார். மலையாளத்தில் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கியிருந்தார். இப்படத்தை பார்த்த தெலுங்கு நடிகர் ராம்சரண், தன் தந்தை சிரஞ்சீவிக்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்கும் என கருதி, அதன் தெலுங்கு ரீமேக் உரிமையை கைப்பற்றினார்.


இதைனையடுத்து தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் மோகன்ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்க ஒப்பந்தமானார். இப்படத்திற்கு கடந்த ஜனவரி மாதமே பூஜை போடப்பட்ட நிலையிலும், படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் படம் கைவிடப்பட்டது, படத்தில் இருந்து மோகன்ராஜா விலகிவிட்டார் என்றெல்லாம் வதந்திகள் உலாவி வந்தன.

இந்நிலையில், சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய மோகன் ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சிரஞ்சீவி. இதுதவிர லூசிபர் தெலுங்கு ரீமேக்கை தயாரிக்கும் நிறுவனமும் மோகன் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்டது. கொரோனோ ஊரடங்கு காலகட்டம் முடிந்தவுடன் படப்பிடிப்புகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News