தமிழ் சினிமா'வின் மூத்த இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் இன்று மாரடைப்பால் காலமானார்.
தமிழ் சினிமாவில் 80களில் கல்யாணராமன், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், மகராசன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். இவர் இன்று காலை 8:45 மணியளவில் மாரடைப்பு காரணமாக காலமானார்.
இவருக்கு மனைவி மற்றும் குமாரவேலன் என்ற மகனும், பரமேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இவரின் மகன் ஜி.என்.ஆர்.குமாரவேலன் தற்போது தமிழ் சினிமா'வில் பிரபல இயக்குனர் ஆவார். இவர் இயக்கிய படங்கள் நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா போன்றவைகள், மேலும் தற்போது அருண் விஜய்யை வைத்து சினம் என்ற படத்தை இயக்கி உள்ளார்.