"நவரசா" வெளியீடு பற்றி தகவல் தெரிவித்த ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்!

Update: 2021-06-05 15:30 GMT

"நவரசா" வெப் சீரிஸ் வெளியீடு பற்றிய அறிவிப்பை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் தயாரித்து வரும் ஆந்தாலஜி படம் நவரசா. நெட்ஃபிளிக்ஸ்'க்காக தயாரித்து வரும் ஒன்பது குறும்படங்கள் கொண்ட இந்த படத்தின் ஒவ்வொரு குறும் படத்தையும் ஒவ்வொரு டைரக்டர்கள் இயக்கியிருக்கிறார்கள்.


மேலும் ஒளிப்பதிவாளர்களாக பி.சி.ஸ்ரீராம், மனோஜ் பரமஹம்சா, பாலசுப்ரமணியெம்., ராமானுஜம், அபிநந்தன் உள்பட 11 பேர் பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில், இந்த நவரசா ஆந்தாலஜி படம் ஆகஸ்டு மாதம் நெட்பிளிக்ஸில் வெளியாக இருப்பதாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Similar News