'மாகாமுனி' திரைப்படம் உலக அளவில் விருதுகளை வாங்கி குவித்து வருகிறது.
சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மகிமா நடித்து 2019' ல் வெளியான படம் 'மகாமுனி' படம் வெளியான முதல் சில வருதுகளை வாங்கிய 'மகாமுனி' தற்பொழுது மேலும் பல விருதுகள் வாங்கி வருகிறது.
இதுப்பற்றி தயாரிப்புக்குழு சார்பில் கூறுகையில், ‛‛மகாமுனி படம் 9 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. 2 விருதுகள் உறுதியாகி உள்ளன. மேலும் இரண்டு விருதுக்கான போட்டிக்கு தேர்வாகி உள்ளது'' என தெரிவித்துள்ளனர். இப்படம் மேலும் பல விருதுகளை வென்று வருவது ஆர்யா உள்ளிட்ட படக்குழுவை மகழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.