கொரோனோ கால காவல்துறையினரின் சவால்களை குறும்படமாக்கும் இயக்குனர் ராஜமௌலி!
கொரோனோ நேரத்தில் காவல்துறையினரின் அர்ப்பணிப்பு பற்றிய குறும்படம் எடுக்கும் இயக்குனர் ராஜமௌலி.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய இயக்குனர் என பெயரெடுத்த இயக்குனர் ராஜமௌலி தற்பொழுது ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் நடிப்பில் ஆர்.ஆர்.ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இந்தபடத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்ததால் படப்பிடிப்பை ரத்து செய்தார். இதனால் இப்படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டாக தள்ளிப்போகிறது.
இந்த இடைவெளியில் ஒரு குறும்படத்தை இயக்கும் வேலைகளில் ராஜமவுலி இறங்கியிருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த குறும்படமானது கொரோனோ ஊரடங்கு நேரத்தில் காவல்துறையினரின் அர்ப்பணிப்பு மற்றும் எவ்வாறெல்லாம் உயிரையும் பணயம் வைத்து அவர்கள் வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கும் கதையாக உருவாகிறதாம். இதற்காக களப்பணியில் அவர் இறங்கியுள்ளாராம்.