பெரும் வெற்றி பெற்ற 'மகாமுனி' கூட்டணி மீண்டும் அமையப்போகிறது.
இயக்குனர் சாந்த குமார் இயக்கத்தில் ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா நடித்த படம் 'மகாமுனி', அழுத்தமான கதைக்களம் கொண்ட இப்படம் பல சர்வதேச அளவில் விருதுகளை வென்றது. ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்ப்பை பெற்றது. அமேசான் ஓ.டி.டி தளத்திலும் தற்பொழுது வெற்றிகரமாக பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இயக்குனர் சாந்தகுமார் அடுத்ததாக இயக்க உள்ள படத்திலும் ஆர்யா ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை ஆர்யாவே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் ஆர்யா அரண்மனை 3, சார்பட்டா பரம்பரை, எனிமி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.