'மாஸ்டர்' ஹிந்தி பதிப்பில் சல்மான் கான் இணைகிறாரா?

Update: 2021-06-11 03:00 GMT

மாஸ்டர் திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பில் சல்மான்கான் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி நடித்த படம் 'மாஸ்டர்', சமீபத்திய விஜய் படங்களில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் 'மாஸ்டர்'. திரையரங்கில் மட்டுமல்ல ஓ.டி.டி'யிலும் கூட ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.


மாஸ்டர் படத்தை ஹிந்தி நடிகரை வைத்து ரீமேக் செய்தால் பெரிய வரவேற்பைப் பெறும் என ரீமேக் உரிமையை வாங்க போட்டி போட்டார்கள். தற்போது விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க சல்மான் கானை அணுகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தமிழைப் போலவே விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் ஒரு முன்னணி ஹிந்தி ஹீரோவை நடிக்க வைத்தால் படம் இன்னும் பிரம்மாண்டமாகும் என தயாரிப்பு தரப்பு எதிர்பார்ப்புடன் இருப்பதாக தகவல்.

Similar News