இயக்குனர் மோகன்ராஜா இன்றுடன் சினிமாவில் இயக்குனராகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் எடிட்டர் மோகன் பல படங்களுக்கு எடிட்டராகவும், சில படங்களைத் தயாரித்த தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். அவரது இரு மகன்கள் மோகன் ராஜா மற்றும் ரவி ஆகியோர். இதில் மோகன்ராஜா தமிழ் சினிமாவின் தற்போதைய பிரபல இயக்குனர்.
இவர் 2001-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த 'ஹனுமான் ஜங்ஷன்' படம் மூலம் அங்கு முதலில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அர்ஜுன், ஜெகபதிபாபு, சினேகா, லயா என மல்டிஸ்டார்களை வைத்து படம் இயக்கி, பெரிய வெற்றியையும் பெற்றார். அப்படத்தின் படப்பிடிப்பு 2001ம் ஆண்டு ஜுன் மாதம் 11-ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. அந்த விதத்தில் மோகன்ராஜா திரையுலகத்தில் அடியெடுத்து வைத்து நேற்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
பிறகுதான் தமிழில் ஜெயம், எம்.குமரன் S/o மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி, வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற வெற்றி படங்களை இயக்கினார்.