பிரம்மாண்ட 'ராமாயண்' படத்தில் இணையும் அவதார் படக்குழு!

Update: 2021-06-14 04:00 GMT

₹500 கோடி செலவில் 3D தொழில்நுட்பத்தில் தயாராக உள்ள 'ராமாயண்' படத்தில் இணைய அவதார் குழுவுடன் ஒப்பந்தம் செய்யவுள்ளனர் படக்குழுவினர்.


தெலுங்கு தயாரிப்பாளர்களான அல்லு அரவிந்த் மற்றும் மது, நமித் மல்கோத்ரா ஆகியோர் தயாரிக்க இயக்குனரான மது மந்தெனா இயக்கத்தில் இந்திய தேசத்தின் மிகப்பெரும் இதிகாச காவியமான 'இராமாயணம்' ₹500 கோடி செலவில் படமாகவுள்ளது.


ஹிருத்திக் ரோஷன் ராவணன் ஆகவும், தீபிகா படுகோனே சீதை ஆகவும் நடிக்க உள்ள இப்படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை ராமன் ஆக நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்கள். மேலும் இப்படத்திற்காக அவதார் படத்தில் பணியாற்றிய அமெரிக்காவைச் சேர்ந்த காஸ்ட்டியூம் டிசைன் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

கொரோனோ ஊரடங்கு முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News