அட்லீ இயக்கும் ஷாருக்கான் படத்தின் இசையமைப்பாளர் இவரா?

Update: 2021-06-17 03:00 GMT

ஷாருக்கானின் அட்லீ இயக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கப் போகிறார்.


இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அட்லீ, 2013-ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகம் ஆனார். பின்னர் தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்தார். விஜய்க்கு இவர் மூன்று படங்களை இயக்கியுள்ளார். இதில் இரண்டு படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை.


இதனைதொடர்ந்து அடுத்ததாக ரெட் சில்லீஸ் நிறுவனத்திற்காக ஹிந்தியில் ஷாரூக்கான் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இதனையடுத்து இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைப்பாளராகவும், மேலும், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, எடிட்டராக ரூபன் என 'மெர்சல், பிகில்' கூட்டணியையே ஹிந்திப் படத்திற்கும் தொடர உள்ளார் என்கிறார்கள்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Similar News