இயக்குனர் சேகர் கம்முலாவின் அடுத்த படத்தில் மீண்டும் தனுஷின் ஜோடியாக இணைகிறார் சாய் பல்லவி.
பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் பெரும் புகழ் பெற்றவர் சாய் பல்லவி, அதன்பிறகு தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கிய பிடா என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகும் அளவிற்கு முக்கிய கதாநாயகி ஆனார்.
இந்நிலையில், சேகர் கம்முலாவின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் தயாராகும் படத்தில் தனுஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பதாக இயக்குனர் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.